தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 05 Apr 2025

07 December 2010

AL-HASSANIYA Annual Inter House Athletic Meet-2010

மக்கொனை அல் - ஹஸனியா வித்தியாலய இல்ல விளையாட்டு --------------------------------------------------------------- ரூபி இல்லம் சம்பியன் ---------------------- மக்கொனை அல்-ஹஸனியா முஸ்லிம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. ரூபி, டயமண்ட், சபயர் ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் ரூபி இல்லம் 269 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றது. டயமண்ட், இல்லம் 267 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், சபயர் இல்லம் 257 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. அதிபர் எம். எஸ். எம். இர்பான் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மேல் மாகாண சபை உறுப்பினர்களான பியல் நிசான்த்த, ஏ. எம். யூஸ¤ப் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜயன்த்த அபேகுணவர்தன, பிரதேச சபை உறுப்பினர் எம். எச். எம். ஜலால்தீன், முன்னாள் உறுப்பினர் ஸரூக் ராஜா, கல்விப் பணிப்பாளர் எம். எஸ். எம். ஹுஸைன் ஆகியோர் கெளரவ அதிதிகளாகக் கலந்துகொண்டனர். அதிபர்களான ஏ. எல். சிராஜ், எம். எம். எம். சுபைர் உட்பட பல பிரமுகர்கள் விழாவில் பங்குபற்றி சிறப்பித்தனர். அல் ஹஸனியா பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறைமைகளை மேல் மாகாண சபை உறுப்பினர்கள் பெரிதும் பாராட்டிப் பேசினர். 

12 January 2010

AL-HASSANIYA M.V.

அல் ஹஸனியாவில் 1980களின் ஆரம்பபகுதிகளில் திறப்புவிழா நிகழ்வொன்றில்,அல் ஹாஜ் பாக்கிர்மாக்கார் அவர்களால் திறந்துவைக்கப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம்,அப்போதய அல் ஹஸனியாவின் அதிபர் பாரூக் அவர்களும் மற்றும் ஊர் பிரமுகர்களும்.

05 January 2010

Listen Quran Online