தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 06 Apr 2025

29 October 2009

கிண்ணியா பாலம்

சவூதி அறேபிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட் டுள்ள கிண்ணியாவையும் வெள்ளை மணல் கிராமத்தையும் இணைக்கின்ற பாலம் 2009.10.20 ஆம் திகதி ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப் பட்டுள்ளது. 720 மில் லியன் ரூபா செலவில் அமைக்கப்பட் டுள்ள இப்பாலம் 396 மீட்டர் தூரத்தைக் கொண்டுள்ளது. கிண்ணியாவின் கடல்வழிப் போக்குவரத்து சுமார் 500 வருடகால வரலாற் றைக் கொண்டதாகும். இக் காலப் பிரிவில் பல துன்பகரமான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. கிண் ணியாவிலிருந்து அதிகாலையில் புறப்படும் Fary யில் செல்வதற்காக வியாபாரிகள், அலுவலர்கள், மாண வர்கள் என பலதரப் பினரும் ஏறுவார் கள். சிலருக்கு இடம்கிடைக்காது. அவ்வாறே திருமலை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்படும் நோயாளர்களும் இதனூடே கொண்டு செல்லப்பட்டனர். கிண்ணியா மக்கள் அனுபவித்த இத்துயரத்திற்கு விடிவு கிடையாதா என ஏங்கிக் கொண்டிருந்தபோதுதான் கிண்ணியா பெரிய பள்ளிவாசலை நிர்மா ணிப்பதற்கு பார்வையிட வந்த சவூதி அறேபியக் குழுவினரிடம் இலங்கை ஜம்இய்யதுஸ் ஷபாப் நிறுவனத்தினர் கிண்ணியா பாலத்தின் தேவையையும் உணர்த்தினர். இக் குழுவில் இடம்பெற்றிருந்த ஷெய்க் அப்துர் ரஹ்மான் பீபி, அஷ்ஷெய்க் ஸுஊத் ஸாஈ ஆகிய இருவரும் பாலத்தை நிர்மாணிப்பதற்கான நிதியுதவிக்கு ஏற்பாடுகளை செய்வ தாக வாக்களித்தார்கள். அத்துடன் அதற்கான வேண்டுகோளை அரசாங் கம் மூலம் விடுக்குமாறும் ஆலோ சனை கூறினர். அதன் பிறகு நடை பெற்ற பல்வேறு ஏற்பாடுகளில் பல அரசியல்வாதிகள் பங்களித்தனர். பாதையில் ஏறுவதற்கு சில நிமி டங்கள் தாமதித்தால் பல மணித்தி யாலங் கள் காத்திருக்க வேண்டிய நிலமை மாறியுள்ளதையிட்டு மக்க ளின் உள்ளத் தில் மகிழ்ச்சி ஏற்பட் டுள்ளது. அதேநேரம் திருப்தியற்ற மனநிலையிலும் சிலர் காணப்படு கின்றனர். கிண்ணியா துறைப் பக்கம் பாலத்தின் உயரத்திற்கு சமமாக குவிக் கப்பட்டிருக்கும் கிறவல் மணல் மேடு கடுமையான மழைக் காலத்தில் கரைந்து கடலோடு சேர்கின்ற அபா யமுள்ளது. அத்தோடு பாலத்தின் முடிவிலி ருந்து கிண்ணியாப் பக்கமாகப் போடப்பட்டி ருக்கும் உயரமான வீதி யின் இரு மருங்கிலும் எவ்வித பாது காப்புக் கம்பிக ளும் போடப்பட வில்லை. வாகனங்கள் இப்பக்கமாக குடைசாய்ந்து விழுவதற் கான வாய்ப் புக்கள் உள்ளன. இந்நிலைமைகளை பொறுப்புவாய்ந்த அதிகாரி கள் கவனத்திற் கொள்வார்கள் என்று மக் கள் எதிர்பார்க்கின்றனர்