ஊர் செய்திகள்
date
10 July 2015
08 July 2015
லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய துஆ
“ அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர்
இரவை நான் அடைந்து கொண்டால் அதில்
நான் என்ன பிரார்த்திப்பது?”
என்று நான் நபி(ஸல்) அவர்களிடம்
கேட்டேன். அதற்கு அவர்கள், “ அல்லாஹும்ம
இன்னக்க அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ
ஃப’ஃபுஅன்னீ ” (இறைவா! நீ மன்னிப்பவன்.
மன்னிப்பையே விரும்புபவன்.
எனவே என்னுடைய
பாவங்களை மன்னித்தருள்வாயாக!)
என்று பிரார்த்திக்குமாறு கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 25168
06 July 2015
தராவீஹ் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா?
இரவு தாமதித்து பள்ளிக்கு வரும் போது இமாம் தராவீஹ் தொழுவித்துக் கொண்டிருக்கின்றார். அவரைப் பின்பற்றி நாம் இஷா தொழுகையைத் தொழலாமா?
இரவு தாமதித்து பள்ளிக்கு வரும் போது இமாம் தராவீஹ் தொழுவித்துக் கொண்டிருக்கின்றார். அவரைப் பின்பற்றி நாம் இஷா தொழுகையைத் தொழலாமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு.
இது போன்ற சந்தர்ப்பங்களில் தனியாகத் தொழாமல் அல்லது வேறு ஜமாஅத் நடாத்தாமல் தராவீஹ் தொழுவிக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதே சிறந்ததாகும். இமாமினதும், மஃமூமினதும் நிய்யத்து ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சுருக்கித் தொழும் இமாமைப் பின்பற்றி பூரணமாகத் தொழுபவர்கள் தொழுகின்றனர். இங்கு இமாமின் நிய்யத்தும் மஃமூமின் நிய்யத்தும் முரண்படுகின்றனவே! இதில் பிரச்சினை இல்லை.
முஆத்(றழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று இஷாவைத் தொழுதுவிட்டு பின்னர் தனது பகுதிக்குச் சென்று அதே தொழுகையை மக்களுக்குத் தொழுவிப்பார்கள். (புஹாரி, முஸ்லிம்) இதை நபி(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை.
முஆத்(றழி) அவர்கள் முதலில் தொழுத இஷா கடமையாகவும் பின்னர் தொழுதது ஸுன்னத்தாகவும் கொள்ளப்படும். அவரைப் பின்பற்றி அவரது பகுதி மக்கள் தொழுதுள்ளனர். அதை நபி(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை. எனவே, தராவீஹ் தொழுவிக்கும் இமாமைப் பின்பற்றி இஷாவைத் தொழுவது ஆகுமானதாகும்.
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி –
26 June 2015
SAMSUNG BATTERY பற்றி வதந்தி பொய்யானது, உண்மை இதுதான்!
நாட்களாக ஒரு புரழி பரவி வருகிறது
சம்சாங் (samsung) தொலைபேசிகளின்
பேட்டரியின்(battery) மேல் ஒட்டி
இருக்கும் ஸ்டிகர்(sticker) யை
கழட்டினால் உள்ளே ஒரு சிப்(chip)
இருப்பதாகவும் அந்த சிப் மூலமாக
நமது மொபைலில் இருக்கும்
படங்கள்,வீடியோக்கள், தரவுகள்
இரகசியாமாக சம்சுங் காம்பனி திருடி
எடுப்பதாகவும் போன்ற செய்திகள் பரவி
வருகிறது.
இதை பார்த்த பலர் தமது சம்சாங்
தொலைபேசியின் பேட்டரியின்
ஸ்டிக்கரை கழட்டி அந்த சிப்பை
அகற்றியும் உல்லார்கள் சிலர் அதை
பேஸ்புக்கில்வீடியோவாகவும்
போட்டு மற்றவர்களுக்கும் இவ்வாறு
செய்யும் படி சொல்லி உள்ளார்கள் ..
ஆம் அப்படி ஒரு சிப் போன்ற ஒன்று
சம்சாங் பேட்டரிகளில் இருப்பது
உண்மை தான் ஆனால் அதன் மூலமாக
நமது தொலைபேசியில் இருக்கும்
தரவுகள் திருடப்படுவதாக சொல்லும்
செய்தியில் எந்த உண்மையும் இல்லை.
உண்மையில் அது சிப் இல்லை அது
நமது தொலைபேசியில் இருக்கும் NFC
Function யை இயக்குவதற்கு பயன்படும்
வெரும் அணடனா(antenna) மட்டும் தான் ,
இந்த அண்டனா லேட்டஸ்ட் சம்சாங்
தொலைபேசிகளின் பேட்டரியில்
அதிமாக இருக்கும் உதாரணமாக
S2,S3,S4,Note 4…. மற்றும் இது சம்சாங்
தொலைபேசிகளில் மட்டும் இல்லை
ஏனைய ப்ரேண்ட் தொலைபேசிகளின்
பேட்டரியில் உண்டு..
இந்த சிப்பை நாம் பேட்டரியில் இருந்து
அகற்றி தொலைபேசியில் பேட்டரியை
போட்டு On பன்னினால் நமது
தொலைபேசி பழையபடி வேலை
செய்யும் ஆனால் NFC Function மட்டும்
வேலை செய்யாது இதைத்தவிர
தொலைபேசிக்கு எந்த பாதிப்பும்
இல்லை.
இவ்வாறு அகற்றியவர்களுக்கு மீண்டும்
NFC வேலை செய்ய வேண்டும் என்றால்
தொலைபேசியின் பேட்டரியை
மாற்றுவதை தவிர வேரு எந்த வழியும்
இல்லை….
இதை அதிகம் பகிர்ந்து உமது
நண்பர்களையும் அறியச்செய்வோம்.
தகவல்:இனையம்.
Subscribe to:
Posts (Atom)
